திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின்
தொழிலக முத்தமிழ் மன்றத்தில் கடந்த அன்று பாவேந்தர் பாரதிதாசன் விழா மனமகிழ் மன்ற
உள்ளரங்கில் சிறப்பாக நடைபெற்றது. மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.வீ.காமராசு அனைவரையும் வரவேற்புரை
நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவரும்
இனப்பில்லா எஃகு குழாய் தொழிலகத்தின் போதுமேலாளரும் ஆகிய திரு.ஞா.செயப்பிரகாசு அவர்கள் தலைமை ஏற்று பாவேந்தர்
பாரதிதாசன் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
பாரதிதாசன்
பல்கலைக்கழக தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் முனைவர்
கோ.பார்த்தசாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பெல் வளாகம்
மற்றும் திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பாரதிதாசன் விழாவை
முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவியர்
விழாவில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். முன்னதாக போட்டிகளில் வென்ற மாணவ
மாணவியர் மேடையில் தமது திறமையை வெளிப்படுத்தினர்.
சிறப்புரையில்
முனைவர் கோ.பார்த்தசாரதி அவர்கள் நிகழ்த்திய உரையில் போட்டியில் வெற்றிபெறாத
மாணவர்களையும் ஊக்குவித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
மன்றத்தின்
செயலாளர் திரு.கோ.திரவியம் குறளும் பொருளும் வழங்கினார். நிகழ்ச்சியை செயலாளர்
மு.குமார் தொகுத்து வழங்கினார். மன்றத்தின் அமைப்புச்செயலாளர் திரு செ. இராமசெயம்
நன்றியுரைக் கூறி விழாவை நிறைவு செய்தார்.